முன்னாள் ராணுவதளபதி விகே.சிங்கிற்கு எதிராக, விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதன் மூலம், மத்தியஅரசு, தன் அரசியல் சுய நலத்துக்காக, சிபிஐ., போன்ற புலனாய்வு அமைப்புகளை, தவறாக பயன் படுத்துவது, அம்பலமாகிவிட்டது’ என்று பா.ஜ.க , செய்தி தொடர்பாளர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்:

முன்னாள் ராணுவதளபதி விகே.சிங், ராணுவத்தின் தொழில் நுட்ப புலனாய்வு அமைப்பை, தவறாக பயன் படுத்தியதாகவும், அந்த அமைப்புக்கு ஒதுக்கப்பட்டநிதியை, காஷ்மீர் அரசை சீர்குலைக்க பயன்படுத்தியதாகவும், காங்கிரஸ்கட்சியினர், புதுபூதத்தை கிளப்பிவிட்டு உள்ளனர். விகே.சிங்கிற்கு எதிராக, சிபிஐ., விசாரணைக்கு உத்தரவிடவும், மத்திய அரசு, முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், தன் அரசியல் சுய நலத்துக்காக, சிபிஐ., போன்ற புலனாய்வு அமைப்புகளை, மத்திய அரசு, தவறாக பயன் படுத்துவது, அம்பலமாகி உள்ளது.

விகே.சிங்கிற்கு எதிராக, மத்திய அரசு கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும், பொய்யானவை. ஒருநாட்டின் ராணுவதளபதி, ஒரு மாநில அரசை, ஏன் சீர்குலைக்க வேண்டும்? அரியானாவில் நடந்த பா.ஜ.க , பொதுக்கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவருடன், விகே.சிங்கும் பங்கேற்றார்.

இதன் காரணமாகவே, அவரை பழிவாங்குவதற்கு, காங்கிரஸ் முயற்சி செய்கிறது . மத்திய அரசின், இந்த தவறான அணுகு முறையை, நம் எதிரிநாடுகள், தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தும் அபாயம் உள்ளது. ஆட்சிக்குவந்த, 100 நாட்களில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக, காங்கிரஸ் கூறியிருந்தது. ஆனால், ஆட்சிக்குவந்து, ஐந்தாண்டுகள் ஆகியும், எந்தவாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

Leave a Reply