பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி அடுத்த மாதம் கர்நாடகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக முன்னாள் முதல்வர சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பா.ஜனதாவில் இருந்து பிரிந்துசென்ற முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பாவையும், ஸ்ரீ ராமுலுவையும் மீண்டும் கட்சியில்சேர்ப்பதற்கான பேச்சு வார்தைகள் நடந்துவருகிறது. அவர்களை சேர்ப்பதுபற்றிய இறுதி முடிவை கட்சி மேலிடம்தான் எடுக்கும்.

பா.ஜ,க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, அக்டோபர் 3வது வாரம் கர்நாடகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அவர் வெவ்வேறு இடங்களில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருக்கிறார். நரேந்திர மோடியின் வருகைபற்றிய தகவல் பா.ஜனதா கட்சி தொண்டர்களுக்கு புதுஉற்சாகத்தை கொடுத்துள்ளது என்றார்.

Tags:

Leave a Reply