வரவிருக்கிற பாராளுமன்ற தேர்தலில் உ.பி.,யின் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும்நோக்கில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி லக்னோவில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில் கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

தற்போதைய நிலையில் இந்தியாவில் புகழ் பெற்ற தலைவராக நரேந்திர மோடி விளங்கிவருகிறார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அவர் எந்ததொகுதியில் போட்டியிடுவார் என்பதை கட்சியின் மத்தியதேர்தல் குழுதான் முடிவு செய்யும்.

அத்வானி எங்கள் மூத்த_ தலைவர் மற்றும் வழிகாட்டி. மேலும் எங்களுக்கு எல்லாமுமாக இருப்பவர் அவரே. எங்களின் தவறுகளை சுட்டிக் காட்ட அவருக்கு உரிமையுள்ளது. பிரதமர்வேட்பாளராக மோடியை அறிவித்ததில் அவருக்கு எந்தவெறுப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

Leave a Reply