திருச்சியில் நடைபெறும் பா.ஜ.க இளைஞரணிமாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜக.,வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி திருச்சி வருகிறார்.

2014-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி செப்டம்பர் 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டிவருகிறார்.அதன் ஒருபகுதியாக திருச்சி ஜிகார்னர் மைதானத்தில் நடைபெறும் பா.ஜ.க மாநில இளைஞரணி மாநாட்டில் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.

இளந் தாமரை மாநாடு என பெயரிடப்பட்டுள்ள இந்தமாநாட்டில் பா.ஜ.க தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங், தேசிய இணை அமைப்புப் பொதுச் செயலாளர் வி. சதீஷ், பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தேசிய இளைஞரணித் தலைவர் அனுராக் சிங் தாகூர், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பங்கேற்பவர்களை உறுதிசெய்ய முன்பதிவு செய்வதற்காக www.modiintamilnadu.com என்ற இணைய தளம் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

Leave a Reply