குஜராத் மற்றும் தமிழக மீனவர்களை பாகிஸ்தான் இலங்கை உள்ளிட்ட நாடுகள் கைதுசெய்ய பலவீனமான மத்திய அரசு தான் காரணம்,காங்கிரஸ் இயல்பை அதிகம் அறிந்தவர் காந்தி. அதனால்தான் அவர், சுதந்திரம் கிடைத்தவுடன், “காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள்’ என்றார். அவருடைய விருப்பதை நிறைவேற்றும்பொறுப்பு நமக்கு உள்ளது. நாம்தான் காங்கிரசை கலைக்க வேண்டும் என பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி குற்றம்சுமத்தியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற இளந் தாமரை மாநாட்டில் பங்கேற்ற நரேந்திரமோடி தொடக்கத்தில் சிலநிமிடங்கள் தமிழில் பேசினார்.பின்னர் அவர் பேசியதாவது நம்நாட்டில் போரால் உயிரிழந்த ராணுவத்தினரின் எண்ணிக்கையைவிட, பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த வீரர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதை உணரும் போது, கோபம்தான் வருகிறது.

மொத்தம், 125கோடி மக்கள் உள்ள நம்நாட்டில், கேரள மீனவர்களை, இத்தாலி நாட்டினர் கொல்லும் போது, பாகிஸ்தான், நம் ராணுவ வீரர்களின் தலையை துண்டிக்கும் போது, எல்லையில் வீரர்களை சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் நடக்கும்போது, நம் பிரதமர், பாகிஸ்தான் பிரதமரோடு, பிரியாணி சாப்பிடுகிறார் என்றால், நாட்டில் நடந்து கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது! கையாலாகாத நாடாக, பல வீனமான, சக்தி இல்லாத நாடாக, நாட்டின் உள்ளேபுகுந்து சதிச்செயல்கள் நடத்தப்படும் நாடாக, இந்தியா இருப்பது ஏன் என்றகேள்வி, அனைவர் மனதிலும் எழுகிறது. பாகிஸ்தான், நம்நாட்டின் மீது தாக்குதல் நடத்தும்வேளையில், அந்நாட்டு அதிகாரிகளுடன் பிரதமர் பேச்சுநடத்துவது தேவையா?

தன்னை, அமெரிக்கா கண்காணிக்கிறது என அறிந்த பிரேசில்நாடு, அமெரிக்க பிரதிநிதிகள் குழு, தன் நாட்டுக்குள் நுழைய, எதிர்ப்புதெரிவித்தது. தன்மானத்தை காக்க, பிரேசில் எடுத்த
நடவடிக்கையை, பாராட்ட வேண்டும். அதேபோல், அமெரிக்க உளவுத்துறையில் பணியாற்றிய ஸ்னோடென், அந்நாடு, மற்ற நாடுகளை உளவுபார்த்த விஷயத்தை வெளியிட்டார். அவரை கைதுசெய்ய, அமெரிக்கா முயற்சித்தது. அவர், ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். அந்நாடு அவருக்கு, புகலிடம்கொடுத்தது. இதனால், அமெரிக்க அதிபர் ஒபாமா, “ரஷ்யா மண்ணில் கால்வைக்க மாட்டேன்’ என்று கூறினார்.

இதுதான் நாட்டுப்பற்று! சிறியதோ, பெரியதோ, ஒருநாட்டின் தன்மானத்துக்கும், சுய கவுரவத்துக்கும் இழுக்கு ஏற்படுமானால், எதைப்பற்றியும் கவலைப்படாமல், சூழல் பற்றியும் கவலைப்படாமல், தன்நாட்டின் சுயகவுரவம், தன்மானத்தை காப்பாற்ற, தலைவர்கள், வீறுகொண்டு எழுந்து நிற்பது வழக்கம். நான் பிரதமரிடம் ஒன்றுகேட்க விரும்புகிறேன்… நாட்டின் தன்மானத்துக்கு, கவுரவத்துக்கு முன்னுரிமை கொடுக்காமல், உலகநாடுகளின் நிர்பந்தத்துக்காக, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தேவையா? ஒரு நாட்டின் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எல்லைக்கு பாதுகாப்பில்லை. மக்களுக்கு பாதுகாப்பில்லை. எந்தமாநிலமாக இருந்தாலும், அதற்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பில்லா அரசு இருக்கும் போது, நம் முதல் கடமை, அந்த அரசை தூக்கி எறியவேண்டும் என்பதுதான்.

Narendra Modi addresses BJP Youth Conference in Trichy

டில்லியில் உள்ள அரசு, நாட்டின்பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியுள்ளது. முழுமையாக வீழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் நாம் பொருளாதார ரீதியாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, நாட்டின் நாணயமதிப்பை வீழ்த்தியுள்ளது. காங்கிரஸ் அரசுதொடர்ந்தால், நாட்டின் நாணயத்துக்கு மதிப்பில்லாத சூழல் ஏற்படும். இந்த ஆட்சி இன்னும், ஐந்தாண்டுகள் நீடித்தால், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள், வேலை இழந்து, சாலை யோரங்களில் பிச்சை எடுப்பர் என்று , மேதைகளும், பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர். மக்களிடம் பிளவை ஏற்படுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சிமூலம் ஆட்சியை நீடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியானது மனதால், வாக்கால், சிந்தனையால் பிளவுபட்ட சிந்தனை உள்ள கட்சியாகும். நாட்டில் உள்ளமக்கள் ஒருமைப்பாட்டுக்காக போராடியபோது,

காங்கிரஸ் நாட்டை இரண்டாகபிளந்தது. அரசியல் சட்டதை உருவாக்கும் போது கூட, அதில் பிளவை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள காஷ்மீரில் தனிச்சட்டம், தனிக்கொடி, தனிபிரதமர் என்ற நிலை உள்ளது. அந்தபாவத்தை செய்ததும் காங்கிரஸ்தான். நாட்டின் நதி நீர் பிரச்னையில் மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்திய பாவத்தையும் காங்கிரஸ் செய்துள்ளது. பிரித்தாளும்சூழ்ச்சியை கையாளும் காங்கிரஸ்கட்சி, மொழிவாரி மாநிலங்களை ஏற்படுத்தி, மொழிவாரியாக மக்களை பிரிக்கும் பாவத்தையும்செய்கிறது.

கடந்த, 1857ல் இந்துக்களும், முஸ்லிம்களும் சுதந்திரத்துக்காக போராடிய போது, மதத்தின்பெயரால் பிளவை ஏற்படுத்தியது காங்கிரஸ். ஓட்டுவங்கிக்காக இந்த பாவத்தை காங்கிரஸ் செய்கிறது. ஜாதிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்திய பாவத்தையும் காங்கிரஸ் செய்துள்ளது. சகோதரர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டு, ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும், நாட்டில் எல்லாவிதத்திலும் பிளவை ஏற்படுத்தி ஆட்சியை காப்பாற்ற நினைக்கும் காங்கிரஸ் பிடியிலிருந்து, நாடு விடுதலைபெற வேண்டும். நானோ, நீங்களோ அறிந்திருப்பதைவிட,

Narendra Modi addresses BJP Youth Conference in Trichy

காங்கிரஸ் இயல்பை அதிகம் அறிந்தவர் காந்தி. அதனால்தான் அவர், சுதந்திரம் கிடைத்தவுடன், “காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள்’ என்றார். அவருடைய விருப்பதை நிறைவேற்றும்பொறுப்பு நமக்கு உள்ளது. நாம்தான் காங்கிரசை கலைக்க வேண்டும். நாட்டை காப்பற்றவேண்டுமானால், காங்கிரஸ் கட்சியிடமிருந்தும், அதனுடன் இணைந்து செயல்படும் கட்சிகளிடமிருந்தும், அக்கட்சிக்கு தரகு வேலை பார்க்கும் சக்திகளிடமிருந்தும், நாட்டை விடுவிக்க வேண்டும். காங்., கட்சியை தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply