நாணயத்தின்மதிப்பு அதன் உலோக மதிப்பை காட்டிலும் குறைந்து கொண்டிருக்கிறது திருச்சியில் வியாழக் கிழமை நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் பா.ஜ.க தேசியச் செயற் குழு உறுப்பினர் இல. கணேசன் பேசியதாவது

“வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஒரே ஒரு குறைதான். அப்போது அந்த அரசுக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறைவாக இருந்தது. இந்தமுறை மோடி அதைச் சரி செய்து, தமிழ்நாட்டிலிருந்து கணிசமான பங்களிப்பை செலுத்தவேண்டும்.

நம்முடைய நாணயத்தின்மதிப்பு அதன் உலோக மதிப்பை காட்டிலும் குறைந்து கொண்டிருக்கிறது. எல்லையில் ஏராளமான தொல்லைகள் உள்ளன . இவற்றை சரிசெய்ய நல்லதொருவாய்ப்பு வந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 1967ல் தேசிய கட்சியின் ஆட்சிமாறி, திமுக ஆட்சிக்குவந்தது. அதை தொடர்ந்து காங்கிரஸ் பலமிழந்து வருகிறது. இனி ஒருகாலத்திலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என்றார்.

Leave a Reply