ஜம்முகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ஹிரர்நகர் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 காவல்துறையினர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் சம்பாபகுதியில் ராணுவ

முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கர்னல் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடான சண்டையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீநகரில் நடைபெற்றது.

இதில் ஜம்முகாஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் வீரர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதைசெலுத்தினர். இறுதி அஞ்சலிக்கு பிறகு ராணுவ வீரர்களின் உடல் அவர்களது சொந்தமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

இதனிடையே தீவிரவாத தாக்குதலைகண்டித்து பாஜக நடத்திவரும் முழு அடைப்பு போராட்டத்தால், இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்க படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Leave a Reply