திருச்சி இளந்தாமரை மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் பாஜகவின் வாக்கு வங்கி 10 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என கணிக்கப்பட்டுள்ள நிலையில், நடைபெறவுள்ள

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகமக்கள் பா.ஜ.க.,வுக்கு முழு ஆதரவு அளித்து வாக்களிக்கவேண்டும்.

நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு மத்தியமாநில அரசுகள் பலதுறைகளிலும் பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்.

இந்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தி பாஜக நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவளித்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றிதெரிவிப்பதுடன், மாணவர் சமூகம் பா.ஜ.க.,வுக்கு முழு ஆதரவு தரவேண்டும்.

தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சியை இந்திய அரசு தடுப்பதுடன், தமிழர்களின் புனர் வாழ்வுக்கான முயற்சிகளையும் துரிதப்படுத்தவேண்டும். மேலும், தமிழர்களுக்கான அனைத்து உதவிகளையும் வடக்குமாகாண அரசு மூலம் செயல்படுத்த இந்திய அரசு முன்வரவேண்டும்.

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்திவரும் இலங்கையின் செயல்பாடுகளை இந்திய அரசு கண்டிப்பதுடன் தேவைப்பட்டால் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கச்சத்தீவின் உரிமையை முழுமையாக திரும்பப்பெறும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபடவேண்டும். மேலும், கச்சத்தீவின் உரிமைகள் பற்றிய சரித்திர ஆவணங்களை வெள்ளை அறிக்கையாக மக்கள் முன்பு வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதுடன் தமிழக அரசின் வருவாயைப் பெருக்கும் வேறு வழிகளை ஆராய வேண்டும்.

பாஜக மற்றும் இந்துத் தலைவர்கள் கொல்லப்பட்டு வருவதைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்துக்கு தேவையான நீர் உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இளம் விவசாயிகளுக்கு ஏற்படுத்துவதுடன் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்தவேண்டும்.

Leave a Reply