ராகுலின் விமர்சனத்தை தொடர்ந்து சுய மரியாதை இருந்தால் பிரதமர் மன்மோகன் சிங் தமது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

தண்டனை பெற்ற எம்பி, எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் வகையிலான மத்தியஅரசின் அவசரசட்டம் பெரும்சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியோ, முட்டாள்தனமான அவசரசட்டம், கிழித்து குப்பையில் போடுங்கள் என கடுமையாக சாடியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜ்யசபா எதிர்க் கட்சித் தலைவரான அருண்ஜேட்லி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏதேனும் சுயமரியாதை இருந்தால் அவர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் சுயமரியாதை குறித்து நாடு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது என்றும் ஜேட்லி கூறியுள்ளார்.

Leave a Reply