திருச்சியை கலக்கிய மோடி இன்று தலைநகரான டில்லியை கலக்கபோகிறார், டெல்லியில் பெரும் கூட்டத்தில் மோடி பேச உள்ளார். நவம்பர் மாதம் டில்லி சட்டமன்றதேர்தலும் நடைபெற உள்ளதால், இந்தபேரணிக்காக பெரும் ஏற்பாடுகளை பா.ஜ.க., செய்துவருகிறது.

இரண்டுலட்சம் பேர் அமரக்கூடிய, மாநாட்டு இடத்தில், முதலில் பூமிபூஜை நடத்தினர் கட்சியினர். 20 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த திடலில் சுமார் 5 லட்சம் பேர் அமர்ந்து பார்வையிட முடியும். பொதுக் கூட்ட மேடை மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மோடியின்பேச்சை டில்லியில், 100 இடங்களில் ராட்சத ‘டிவி’ ஸ்கீரினில் காட்டப்போகின்றனர். இதன் மூலம் மேடையில் அமர்ந்துள்ள தலைவர்களையும், அவர்கள் பேசுவதையும் பெரியவடிவில் பார்க்க முடியும்.

மேடை அமைக்கும் பணியை பாலிவுட் படவுலக திரைப் படங்களுக்கு மாதிரி “செட்’ அமைக்கும் நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.

பொதுக்கூட்ட நிகழ்வுகளை தொலைக் காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பும் வசதிகளும் பிரத்யேகமாக செய்யப்பட்டுள்ளன.

ஒரேநேரத்தில் சுமார் 100 தொலைக்காட்சிகள் வரை நேரலை காட்சிகளை ஒளிபரப்பு செய்ய முடியும். இதற்கான தொழில்நுட்பத்தை பாஜக ஊடகப்பிரிவு உருவாக்கியுள்ளது.

மோடியின் பொதுக்கூட்டம் தொடர்பாக தனியார் தொலைக் காட்சிகள், பண்பலை வானொலி சேவைகளில் விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. கட்சித் தொண்டர்களை கவருவதற்காக பிரத்யேகமாக மோடியின் உருவம்பொறித்த டி-ஷர்டுகள், தொப்பிகள், பேட்ஜுகள் போன்றவையும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மோடியின் டில்லி கூட்டம் காங்கிரசை தோல்வி அடைய செய்யும் என்று, பா.ஜ.க.,வினர் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply