நரேந்திரமோடியை ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ. சேதி பஸ்வான்  சந்தித்துபேசினார் குஜராத் முதல்வரும் பாஜக.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியை ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த பீகார்மாநில எம்எல்ஏ. சேதி பஸ்வான் இன்று சந்தித்துபேசினார்.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பலமாநிலங்களுக்கும் சென்று பிரசாரம்மேற்கொண்டு வருகிறார் நரேந்திரமோடி. பீகார்மாநிலம் பாட்னாவில் அடுத்தமாதம் 27ந் தேதி நரேந்திரமோடி உரையாற்ற இருக்கிறார். இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த பீகார் எம்எல்ஏ. சேதி பஸ்வான், அகமதாபாத்தில் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Leave a Reply