திருச்சியில் நடைபெற்ற பாஜக இளந்தாமரை மாநாட்டை வெற்றி பெறச் செய்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர்வெளியிட்ட அறிக்கை:

1967-ஆம் ஆண்டு காங்கிரஸ்கட்சிக்கு எதிராக திரண்ட மாணவர்களும், இளைஞர்களும் 47 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அந்த கட்சிக்கு எதிராக ஒன்றுதிரண்டுள்ளனர்.

ஈழ தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காக்க நரேந்திரமோடியால் மட்டுமே முடியும் என்று மாணவர்களும் இளைஞர்களும் நம்புகின்றனர்.

அதனை மெய்ப்பிக்கும் விதமாக திருச்சியில் மோடிபங்கேற்ற இளந்தாமரை மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் திரண்டனர்.

மோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக திருச்சிமாநாட்டை வெற்றி பெறச்செய்த பா.ஜ.க இளைஞர் அணி உள்ளிட்ட கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் , தொண்டர்களுக்கும் பொன். ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply