மத மாற்றத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் மத மாற்றத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் கருத்து தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் இராமகோபாலனின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு மதமாற்றம் தேசியஅபாயம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் இராமகோபாலன் மேலும் பேசியதாவது

போர் ஆயுதமின்றி, பணம் மற்றும் ஊடகபலத்துடன் மதரீதியாக நாடு பிடிக்கும் முயற்சியில் சிலசக்திகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

மத மாற்றத்தின் தீமை குறித்து மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பிரசாரம் மேற்கொண்டு, மத மாற்றத்திற்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டவேண்டும்.

மதமாற்றத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை என்று இந்துக்கள் முடிவெடுத்தால் போதும். கேரளத்தில் இளம் பெண்களைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றி, கடத்திச்சென்று பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தும் கொடூரமானகாரியம் இங்கும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். என்றார்.

Leave a Reply