ராகுல்காந்தியின் விமர்ச்சனம் பிரதமர் மன்மோகன்சிங்கை அவமானப்படுத்துவதாகும் அவசரச்சட்டம் குறித்த ராகுல்காந்தியின் விமர்ச்சனம் பிரதமர் மன்மோகன்சிங்கை அவமானப்படுத்துவதாகும் என்று பாஜக பொதுச்செயலாளர் வருன்காந்தி கண்டித்துள்ளார்.

எம்.பி. எம்.எல்.ஏ-க்களை பாதுகாக்கும் நோக்கில் அவசரச் சட்டம் ஒன்றிற்கு மத்திய அரசு ஒப்புதல்வழங்கியது. இதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்தது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க சென்றுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி இந்த அவசரச்சட்டம் முழு முட்டாள்தனமானது என்று அரசை குறை கூறியிருந்தார்.

இதற்க்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக பொதுச் செயலாளர் வருன்காந்தி அவசரச் சட்டம் குறித்த ராகுல் காந்தியின் விமர்ச்சனம் பிரதமர் மன்மோகன்சிங்கை அவமானப்படுத்துவதாக உள்ளது . அவர் வெளிநாட்டில் இருக்கிறபோது, அவர்மீதான ஒரு அவமதிப்பு, ஒட்டுமொத்த இந்தியாவையே அவமானப்பத்தியதாக உள்ளது. எனவே ராகுல்காந்தியின் இந்த விமர்ச்சனத்தை நான் கண்டிக்கிறேன் என்றார் .

Leave a Reply