பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையை முட்டாள் என பேசுகிறார் ராகுல்காந்தி. பிரதமருக்கு கொஞ்சமாவது சுயமரியாதை இருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக முன்னாள் தலைவர் நிதின்கத்காரி.

டெல்லியில் நடந்த பா.ஜ.க.,வின் விகாஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், நாங்கள் சிறுபான்மைமக்களுக்கு எதிரானவர்கள் அல்ல, நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிரானவர்கள். பொருளாதாராம் ஸ்தம்பித்து போயுள்ளது. நமது தங்கத்தை அடமானம்வைக்கும் நிலைக்குப் போய்விட்டோம்.

பிரதமரமையும், அவரது கேபினட்டையும் நான்சென்ஸ் என கூறுகிறார் ராகுல்காந்தி. தனக்கு சுய மரியாதை இருக்கிறது என்பதை கொஞ்சம்கூட வெளிப்படுத்தாமல் அமைதிகாக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். ஏன்…பிரதமர் செயல்படமுடியாத நிலையில் இருக்கிறார். டெல்லியில் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியமைக்கும். நாட்டில் பெரும்மாற்றத்தை கொண்டுவரும் என்றார் கத்காரி.

Leave a Reply