லாலுபிரசாத் யாதவுக்கு தண்டனை வரவேற்கத்தக்கது  மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதை தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாட்டுத்தீவன ஊலல் வழக்கில் பிகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவுக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 17 வருடங்களுக்கு பிறகு தீர்ப்புவந்தாலும் நீதி உறுதி செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ஊழல் அரசியல் வாதிகளையும், அவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியல் கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply