பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியையும், அமித் ஷாவையும் பொய் வழக்கில் சிக்கவைக்க பிரதமர் புலனாய்வு நிறுவனங்களை தவறாக பயன் படுத்துகிறார் என பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி குறை கூறியுள்ளார்.

இதுகுறித்த அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பாஜக வேட்பாளராக உள்ளார். அரசியல் ரீதியாக பா.ஜ.க வையோ, நரேந்திர மோடியையோ எதிர்க்கமுடியாது. எனவே, குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டரில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றபெயரில் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் மோடியையும், அவரது முன்னாள் உள்துறை அமைச்சரவையில் இருந்த அமித்ஷாவையும் சிக்கவைக்க புலனாய்வு அமைப்புகள் முயற்சிசெய்து வருகின்றன.

இந்த விவகாரங்களில் உண்மைகளை கண்டறியவேண்டிய பொறுப்பு உங்களுடையது என்றே நான்நம்புகிறேன். புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரமான நடவடிக்கைகளை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். இது தடுக்கப்படவில்லை என்றால் , இது இந்தியாவின் ஜனநாயகத்தை பெரிதும்பாதிக்கும்.

அரசியல் குற்றச்சாட்டுகளும், திட்டமிடப்பட்ட விசாரணைகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குழுவின் விசாரணைக்குள் கொண்டுவரவேண்டும் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார் .

Leave a Reply