பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

திருச்சியில் நடந்த பா.ஜ.க இளந்தாமரை மாநாட்டின் மூலம் தமிழகமக்கள் மத்தியில் நரேந்திரமோடி அலைவீசுகிறது. இதை

முறையாக பயன்படுத்தி கொள்ள தமிழக பா.ஜ.க விரும்புகிறது. அடுத்த இரண்டு மாதங்களில், வாக்குசாவடிகளுக்கு பா.ஜ.க தரப்பில் பிரதிநிதிகள் நியமிக்கும்பணி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் திமுக., அதிமுக.வுக்கு மாற்றாக தேசியகட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணிகுறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லிம்லீக் கட்சிகளை தவிர ஏனைய கட்சிகளுடன் கூட்டணிபற்றி விவாதிக்கலாம்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க வுடன் கூட்டணிசேரும் கட்சிகளே 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். என்று இல.கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply