பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமது சுய மரியாதையை விட பதவி நாற்காலிதான் மிகமுக்கியமாக இருக்கிறது என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

தண்டனைபெற்ற எம்பி., மத்திய அரசின் அவசரச்சட்டம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வெளிப்படையாக விமர்சித்ததையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமாசெய்வார் என கருதப்பட்டது.

ஆனால் ராஜினாமாசெய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மன்மோகன் சிங் கூறிவிட்டார். இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர்பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெளியுறவு செயலாளராக ஏபி.வெங்கடேஸ்வரன் இருந்தபோது அவரை அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி வெளிப்படையாக கண்டித்தார். ஒரு மணிநேரத்துக்குள் வெங்கடேஸ்வரன் தமதுபதவியை ராஜினாமாசெய்தார். ஆனால் இந்தியாபோன்ற பெரிய நாட்டின் பிரதமரோ நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பதுதான் முக்கியம் என முடிவுசெய்துள்ளார். பிரதமருக்கு சுயமரியாதையைவிட நாற்காலிதான் முக்கியம் என்றால் நாம் என்ன சொல்வது? என்றார்.

Leave a Reply