மொரார்ஜி தேசாய் வரலாற்றில் சிலநாயகர்கள் அவ்வளவாக நினைவு கூரப்படுவது இல்லை. அத்தகு தலைவர் மொரார்ஜி தேசாய்.

'எந்தசொத்தையும் என் அப்பா எனக்கு சேர்த்துவைக்கவில்லை; நேரான

வாழ்க்கையையும், அறம்சார்ந்த செயல்பாட்டையும் மட்டுமே எனக்குள் விதைத்துவிட்டு போயிருக்கிறார்' என்கிற அளவுக்கு எளிமையான குடும்பத்தில் குஜாரத்தில்பிறந்தார்.

சிவில்சர்வீசஸ் தேர்வில் தேறி ஆங்கிலேய அரசில் பணியாற்றி கொண்டிருந்தவர், காந்தியடிகளின் அழைப்பை ஏற்று உப்புசத்யாகிரகத்தில் பங்குகொள்ள, தன்பதவியை துறந்து வந்தார்.

எண்ணற்ற விடுதலை போராட்டங்களில் பங்கு கொண்ட மனிதர், மும்பை மாகாணத்தின் முதல்வராக உயர்ந்தார். பின், நிதிஅமைச்சராக, துணைப்பிரதமராக காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த இவர், இந்திரா கட்சியை உடைத்ததும் ஸ்தாபனகாங்கிரசில் இணைந்தார். பின்னர் எமெர்ஜென்சியால் நாடு ஜனநாயகம் இழந்தபொழுது ஜெ.பி.யின் பின் அணிவகுத்து ஜனதாகட்சியில் அங்கம் வகித்தார்.

தேர்தலில் வென்றதும் முதல்காங்கிரஸ் அல்லாத பிரதமர் என பெருமைபெற்றார். எல்லா உணவகங்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏழைமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு நல்ல சாப்பாடு ஒவ்வொரு நாளைக்கும் போடவேண்டும் என அவர் கொண்டு வந்த திட்டமே ஜனதா சாப்பாடு என புகழ்பெற்றது. அதை பின்பற்றினால் மட்டுமே உணவகங்களுக்கு அனுமதிதரப்பட்டது.

எம்ஆர்பி.யை பொருட்களின் மீதும் குறிக்கும் முறையும் இவர்காலத்தில் வந்ததே. இவரின் வாழ்க்கை நேர்மையால் மின்னிய தன்மைகொண்டது. பம்பாய் மாகாண அமைச்சராக இருக்கும் பொழுது மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த முதல் தர மாணவியான இவர் மகள் ஒருதாளில் தவறவே தேசாயிடம் மறுதிருத்தலுக்கு விண்ணப்பிக்கிறேன் என கேட்க, இவர் ''நான் இந்தமாகாண அமைச்சர். நீ நேரியவழியில் தேறினாலும் நான்தான் அவ்வாறு செய்யுமாறு செய்தேன் என ஊர்ஏசும். வேண்டாம்'' என்று சொல்ல, மகள் தற்கொலை செய்துகொண்டார்.

அதைவிட நம்பவே முடியாத ஒருநிகழ்வும் நடந்தது. அரசின் மிகமுக்கிய பொறுப்பில் இருந்த இவர், வாடகை கட்டமுடியாமல் அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேற்றபட்டார். எந்த அதிகார துஷ்பிரயோகமும் செய்யாமல் வெளியேறினார். மருமகள் அந்த அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்திரா காந்தியோடு ஏகத்துக்கும் முரண் பட்டாலும் அவரின் மகன் சஞ்சய்காந்தி இறந்த பொழுது அவரை தேற்றபோன முதல் சில ஜீவன்களில் இவரும் ஒருவர்.

பாரதரத்னா மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதான நிஸான் இபாகிஸ்தானி ஆகிய இரு விருதுகளையும் பெற்றவர்.

Leave a Reply