டில்லியில் நேற்று நடைபெற்ற தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட மோடி, இளைஞர்களிடம் உரையாற்றினார். நாடு முழுவதிலிருந்தும் சுமார் 8000 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்க்கு தனக்கே உரிய முறையில் பதில் தந்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களிடம் ஆவர் பேசியதாவது;

பயங்கரவாதத்தால் சுற்றுலாத்துறை பாதிப்படைந்துள்ளது; உலக சுற்றுலாவின்பங்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்; இதில் இந்தியாவின்பங்கு மிகவும் குறைவு; சுற்றுலாத் துறையில் சரியான கவனம்செலுத்தினால் அதன் திறனை சிறப்பாக உயர்த்துவதுடன், நாடுமுழுவதும் ஏராளமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம்; வளர்ந்தநாடுகளில் பல்கலைக்கழகங்களின் கொள்கைகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது;

Narendra Modi addresses finale of Manthan in Delhi

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை சிந்தனையாளர்கள், முடிவுஎடுப்பவர்கள், அதனை அமல்படுத்துபவர்களிடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது; இவர்களை இணைத்து, ஒருங்கிணைந்த செயல்பாட்டை ஏற்படுத்தினால் பல்கலைக் கழகங்களின் தரம் நல்லதொரு முன்னேற்றம்பெறும்; நமது ஐடிதுறை வல்லுனர்கள் அமெரிக்கா போன்ற வளர்ந்தநாடுகளில் சேவையாற்றி வரகின்றனர்; அவர்களை முறையாக பயன்படுத்த நாம் தவறிவிட்டோம்;

பல்வேறு துறைகளில் உள்ள வல்லுனர்களை தேர்வுசெய்து அவர்களை முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டிய நேரம் இது; பட்ஜெட்டில் நமதுகவனம் முதலீட்டிலேயே உள்ளது; ஆனால் உண்மையில் நாம் கவனம் செலுத்த வேண்டியது உற்பத்தியில்தான்; சமூக ஆய்வை மேற்கொண்டு உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; பழங்காலத்தில் மக்கள் ஆறுகளைச்சுற்றி வாழ்ந்து வந்தனர்; தற்போது நெடுஞ்சாலைகளை சுற்றி வசித்துவருகின்றனர்;

எதிர்காலம் டிஜிட்டல் மயமாகி வருவதால் இனி வரும் காலங்களில் மக்கள் தகவல் தொடர்புகளைச் சுற்றிவசிப்பார்கள்; கடந்த 100 ஆண்டுகளில் நாம் நிலங்கள் குறித்த வரைபடங்களை சரியாக வரையவில்லை; ஆனால் நிலங்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன் படுத்துவது மிகவும் அவசியம்; விவசாய நிலங்களைச்சுற்றி பயன்தரும் மரங்களை நடுவது அந்நியச் செலாவணியை குறைப்பதற்கு மட்டுமின்றி விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கவும் உதவும்;

ஆய்வுகள் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்கவேண்டும்; ஆராய்ச்சிகளையும் தொழில்நுட்பங்களையும் விவசாயத்தை பெருக்க பயன்படுத்தவேண்டும்; ஐடிஐ.,களில் வேளாண் திறனை ஊக்குவிக்கும் படிப்புக்களை ஏற்படுத்தவேண்டும்; நிதிநிலை பலம் தராமல் பெண் உரிமை சாத்தியமாகாது; பெண்களுக்கு தனித்தன்மையுடன் முடிவெடுக்கும் உரிமையை நாம் வழங்கவேண்டும்; அதனை வீட்டில் இருந்து துவங்கவேண்டும்; அப்போது தான் பெண் உரிமை முழுமைபெறும்.

Narendra Modi addresses finale of Manthan in Delhi

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தான் பலமுறை பேசினேன் , பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளை கூறினேன் அதனை அவர் ஏற்க மறுத்து விட்டார் ; விவசாயத்துறையில் வாடிக்கையாளர்கள், உற்பத்தி பொருட்கள், விநியோகஸ்தர்களிடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த கூறியதையும் அரசு ஏற்கவில்லை; காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் மதசார்பின்மையை பேசி ஏழை மக்களை ஏமாற்றி வருகின்றன;

ஆனால் ஏழை மக்களுக்கு எந்த மதமும் கிடையாது; அவர்கள் அனைவருக்கும் தேவை உணவு, தங்குவதற்கு இடம், கல்வி இது மட்டுமே; என்னைப் பொறுத்த வரை மதச்சார்பின்மை என்பது நாட்டின் வளர்ச்சிக்கு அளிக்கும் முக்கியத்துவமே; அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்; அதை ஓட்டு வங்கிக்காக பயன்படுத்தக் கூடாது;

மக்களின் மனத்தை புரிந்து கொள்ள தவறியதாலேயே குற்றவாளி உறுப்பினர்களை காப்பாற்ற அவசர சட்டத்தை அவசர, அவசரசாக மத்திய அரசு கொண்ட வந்துள்ளது; ஆனால் தற்போது நாடு விரும்புவது தூய்மையான அரசியலை மட்டுமே; சமூக அக்கரையும், நிதிநிலை அக்கரையும் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் உள்ளனர்; ஆனால் இதனை விடுத்து இளைஞர்கள் தங்களின் சமூக பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட்டு, சாதனை புரிய வேண்டும்; நான் எனது ஆரம்ப காலத்தில் ரயிலில் டீ விற்பனை செய்தேன்; ஆனால் இன்று உங்கள் முன் ஒரு மாநிலத்தின் முதல்வராக நிற்கிறேன்; அதனால் இளைஞர்கள் தங்களின் பிறந்த இடம், கடந்த கால நிலையை நினைக்காமல் தற்போதைய நிலையில் இருந்த ஆர்வமுடன் பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம்;

இளைஞர்கள் தங்களின் ஓட்டளிக்கும் உரிமையை உணர்ந்து நமது நாட்டின் எதிர்காலம் எப்பது இருக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டிய நேரம் இது; அனைவரும் தங்களின் ஓட்டளிக்கும் உரிமையை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் கூற வேண்டும். இவ்வாறு மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

Leave a Reply