நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். வருகிற 18–ந் தேதி மாலை 6 மணிக்கு மியூசிக்அகடாமியில் நடைபெறும் நானிபல்கிவாலா ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த விழாவில் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஷோரி, எழுத்தாளர் சோ உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.

விழாவில் அருண்ஷோரி எழுதிய புத்தகத்தையும் நரேந்திரமோடி வெளியிடுகிறார். இந்த தகவலை பல்கி வாலா பவுண்டேசன் டிரஸ்டி ராஜா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் சமீபத்தில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நரேந்திரமோடி சந்தித்து பேசினார். அதே போன்று இங்கும் ஏதேனும் அரசியல் மாற்றம் நிகழலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply