தண்டனை பெறும் எம்பி, எம்.எல்.ஏ.,க்களை காக்கும் அவசரச்சட்டம் குறித்து ராகுல் கூறிய கருத்துக்கு சோனியாவின் அறிவுரையேகாரணம் என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது இணையப்பக்கத்தில் அத்வானி கூறியிருப்பதாவது, பிரதமர் மன்மோகன்சிங்கை அவமரியாதைசெய்யும் வகையில், அவசரச் சட்டத்துக்கு எதிராக பேசுமாறு ராகுலுக்கு சோனியாவே அறிவுரைவழங்கியுள்ளார். ராகுல் பிரதமரைமட்டும் அவமரியாதை செய்யவில்லை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளையுமே அவமரியாதை செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.