தமிழக மீனவர்களுக்காக கடல்தாமரை போராட்டத்தை விரைவில் நடத்துவோம் என தமிழக பா.ஜ.க., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர் நிருபர்களிடம் அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: தண்டனைபெறும் குற்றவாளிகளின் பதவியைபறிக்கும் மசோதாவுக்கு எதிராக அவர்களை பாதுகாக்கும் மசோதாவை பிரதமர் மன்மோகன் சிங் கொண்டுவந்தார். அதற்கு எதிராக ராகுல் குரல் கொடுத்து பிரதமர்பதவியை கொச்சைபடுத்தினார்.

தற்போது அவசரசட்டத்தை பிரதமர் திரும்பபெற்றுள்ளார். அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தால் அந்தபதவியின கவுரவம் காப்பாற்றப்பட்டிருக்கும். மத்திய அமைச்சர் சிதம்பரத்தால் தமிழ்நாட்டுக்கு எந்தபயனும் இல்லை. கச்சத் தீவானாலும், இலங்கை தமிழர் பிரச்னையானாலும் எதிலுமே அவர் தமிழ்நாட்டுக்கு சாதகமாக நடந்ததில்லை. வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் தமிழக மீனவர்களுக்கு எந்தபிரச்னையும் இல்லாமல் இருந்தது. கடல்வழி இந்தியாவில் ஊடுருவல் நடக்கிறது. அதற்கு தமிழக மீனவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்பதற்காகதான் அவர்களை கைதுசெய்கிறார்கள். சிலரை விடுவிக்கின்றனர். அடுத்துசிலரை பிடிக்கின்றனர்.

தமிழக மீனவர்களை காப்பாற்ற விரைவில் கடல்தாமரை போராட்டம் நடத்தப்படும். நாட்டையும், வீட்டையும் காப்பாற்ற மோடி பிரதமராகவேண்டும் என்ற கோஷத்தை தமிழக பா.ஜ.க முன்னிறுத்தும் பா.ஜ.க, தலைமையில் மூன்றாவது அணி அமையுமா? என்பது பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது. தேர்தல் நெருங்கும்போது அது பற்றி முடிவு எடுக்கப்படும். நாட்டின் கனிமவளத்தை யாரும் சுரண்டகூடாது. ஆனால் கனிமங்களை எடுக்க அனுமதி வழங்கிவிட்டு, அனுமதியை பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அந்த அனுமதி தவறுஎன்றால் அனுமதிகொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply