கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாதுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளதை பாஜக, வரவேற்றுள்ளது

இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரகாஷ்ஜவடேகர், “இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுவழக்கு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி முறைகேடுவழக்கு, நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளிலும் உடனடியாக தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த வழக்குகளின் தீர்ப்புகளை பொதுமக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்று பிரகாஷ்ஜவடேகர் கூறினார்.

“லாலுவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையின் மூலம் வருங்காலத்தில் ஊழலில் ஈடுபட அரசியல்வாதிகள் பயப் படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்க விரைவுநீதிமன்றங்கள் அமைக்கவேண்டும்’ என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு கூறினார்.

Leave a Reply