நாட்டின் பெட்ரோல்பங்குகளை இரவில் மூடிவிட்டால் ரூபாய் மதிப்பு எப்படிஉயரும் என குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய மோடி, மத்தியில் இருக்கும் ஐ.மு.,கூட்டணி அரசுக்கு என்ன ஆனது எனத்தெரியவில்லை. பெட்ரோல்பங்குகளை மூடினால் ரூபாய் மதிப்பு எப்படி உயரும்?: மோடி கேள்வி ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தபோது இரவு நேரங்களில் பெட்ரோல் பங்குகளை மூடிவிடலாம் என்று ஒருயோசனை முன்வைக்கப்பட்டது. அதெப்படி பெட்ரோல்பங்குகளை இரவு நேரத்தில் மூடிவிட்டால் ரூபாய் மதிப்பு உயர்ந்துவிடும்? நாட்டின் தற்போதைய மோசமான நிலைமைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான்பொறுப்பு என்றார்.

Leave a Reply