தேர்தலில் கட்டாயம் மக்கள் ஓட்டளிக்கவேண்டும் என்ற மோடியின் கருத்து வரவேற்க தக்கது இதை நான் ஆதரிக்கிறேன் என்று அத்வானி தெரிவித்துள்ளார் .

தனது வலைப்பக்கத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கூறியதாவது , தேர்தலின் போது, மக்கள் தங்களது கடமையை நிறைவேற்ற கட்டாயம் ஓட்டளிக்கவேண்டும். பிடிக்காத வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை குறித்து சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன். வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளரை நிராகரிக்கும்பட்டன் இருப்பதன் மூலம் தவறான வேட்பாளர்களை வாக்காளர்கள் அடையாளம்காண முடியும் என்றார். இதன் மூலம் முன்னர் மோடியின் கருத்தினை அத்வானி ஆதரித்து தனதுகருத்தினை கூறியுள்ளார்.

Leave a Reply