முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பங்கஜ்சிங், பாஜக.,வில் இணைந்தார். முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பங்கஜ்சிங், பாஜக.,வில் இணைந்தார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்ட அவர், கடந்த சில மாதங்களாகவே பாஜக.,வில் சேர தீவிரமுயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பாஜக.,வின் உ.பி.,மாநில தலைவர் லஷ்மி காந்த் வாஜ்பாய், கட்சியின் தேசிய பொதுச்செயலர் ஜேபி.நட்டா உடனிருந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக.வை வலுப்படுத்தும் முயற்சியாக, 2014இல் நடைபெறும் மக்களவைத்தேர்தலில் போட்டியிட, பங்கஜ்சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply