இந்துமுன்னணி பிரமுகர் கொலை வழக்குதொடர்பாக தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான அபுபக்கர் சித்திக் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல்கிடைத்துள்ளது.
.

இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலை வழக்கு, சேலம் பாஜக மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கு தொடர்பாக மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ்பக்ரூதின், திருநெல்வேலி மாவட்டம் மேலப் பாளையத்தை சேர்ந்த பன்னா இஸ்மாயில், பிலால்மாலிக், நாகை மாவட்டம் நாகூரைசேர்ந்த அபுபக்கர் சித்தக் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி போலீஸ்பக்ரூதின் மற்றும் அதை தொடர்ந்து 5ம் தேதி கடும்துப்பாக்கி சண்டைக்கு இடையே பன்னா இஸ்மாயில், பிலால்மாலிக் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக்கை சிபிசிஐடி போலீசார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து சிபிசிஐடி வட்டாரங்கள் கூறியதாவது:நாகைமாவட்டம் நாகூரை சேர்ந்த முகமது உசேன் என்கிற அபு பக்கர். இவன் கடந்த 1995ம் ஆண்டு இந்துமுன்னணி பிரமுகர் முத்து கிருஷ்ணன் மனைவி தங்கம் கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி.

இவரை கடந்த 18 ஆண்டுகளாக தேடிவந்த நிலையில், வேலுõர் இந்துமுன்ணி பிரமுகர், சேலம் ஆடிட்டர் ரமேஷ் உட்பட பல்வேறு இந்துபிரமுகர் கொலைவழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

தற்போது மூவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பிலால்மாலிக் கொடுத்த தகவலின் பேரில் சித்திக் இருப்பிடத்தை தேடி பெங்களூருக்கும், ஆந்திர மாநிலத்திற்கும் சிபிசிஐடி தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், போலீஸ் பக்ரூதினிடம் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில், வேலூர் , சேலம் பிரமுகர்கள் கொலை வழக்குகளில் தனக்கு தொடர்பு இருப்பதை ஓப்புகொண்டுள்ள அவன் தற்போது விஎச்பி நடத்தி வரும் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் நாசவேலையில் ஈடுபட சென்னை வந்ததாக தெரிவித்துள்ளான் .

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்துமுன்னணி மற்றும் பி.ஜே.பி.,யின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அதன் தலைவர்களை கொன்றதாகவும் தொடர்ந்து சென்னையில் உள்ள இரண்டுதலைவர்களை கொல்ல திட்டமிட்டதாகவும், ஆனால், அதற்குள் பிடிபட்டு விட்டதாகவும் கூறியிருக்கிறான் .எங்களுக்கான பணத் தேவைகளை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு அளித்துவருவதாகவும் கூறியிருக்கிறான் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply