பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடியை முன்னிலைப்படுத்திய நாள் முதல் காங்கிரஸ் கட்சி அவரை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் ஆந்திரா காங்கிரஸ் எம்பி. ஒருவர் மோடியை பாராட்டியிருக்கிறார்.

குண்டூர் மக்களவைத்தொகுதி காங்கிரஸ் மூத்த எம்.பி. ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனிதெலுங்கானா மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க ஆதரவு அளிக்கும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

ஆனால் தெலுங்கானா விஷயத்தில் பா.ஜ.க தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு பா.ஜ.க ஆதரவுதெரிவித்தால், 13 மாவட்டங்கள்கொண்ட சீமாந்திரா பகுதியில் நிச்சயம் 10 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெறும்.

பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாட்டின் அனைத்துபகுதி இளைஞர்களையும் கவர்ந்துள்ளார். இளைஞர்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

தெலுங்கானாவை உருவாக்குவதன் மூலம் தெலுங்குமக்களை காங்கிரஸ் பிரிக்கிறது. எனவே, ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து எம்.பி. பதவியில் இருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக முடிவுசெய்துள்ளேன் என்று அவர் கூறினார்.

Leave a Reply