தீவிரவாதிகளை பிடித்த போலீஸ் அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள் புத்தூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால்மாலிக் ஆகியோரை பிடிக்கமுயன்ற போது சிறப்பு புலனாய்வுபடை இன்ஸ்பெக்டர் லெட்சுமணனை தீவிரவாதிகள் தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த லட்சுமணன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்கு சென்று இன்ஸ்பெக்டர் லட்சுமணனை பார்த்து ஆறுதல்கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மிககொடூரமாக தாக்கப்பட்டு போலீஸ் அதிகாரி லட்சுமணன் சிகிச்சைபெற்று வருகிறார். மிகவும் துணிச்சலாக போராடி 2 தீவிரவாதிகளையும் பிடித்த போலீஸ் அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

இந்தகைது நடவடிக்கை நடந்திராவிட்டால் நரேந்திர மோடி மற்றும் இந்து இயக்க தலைவர்கள் சிலருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். அந்தமுயற்சியை போலீசார் தடுத்து முறியடித்துள்ளனர். இது பாராட்டுக்குரியது.

இந்தநடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாருக்கு வீரப்பனை சுட்டுகொன்றதற்கு வழங்கப்பட்டதை போல் இரட்டை பதவிஉயர்வு வழங்கப்பட வேண்டும்.

மேலும் தீவிரவாதிகளை வேட்டையாடும் போலீஸ் அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் தகுந்தபாதுகாப்பு வழங்கவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply