பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது கூட்டங்களில் பேசிவருகிறார். இதில் ஒரு பகுதியாக பீகார் தலைநகர் பாட்னாவில் லட்சக் கணக்கானோர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடந்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

வருகிற 27ந் தேதி பாட்னாவில் நடைபெறும் இந்த பா.ஜ.க தேர்தல் பிரசாரகூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். நிதீஷ் குமாரை கலங்கடிக்கும் விதத்தில் இந்த கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது.

இந்நிலையில் மோடி கூட்டத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் விதமாக, அதே நாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்ளும் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழா
நிகழ்ச்சியை நிதீஷ்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பீகாரில் சுற்றுப்பயணம் செல்கிறார். பாட்னாவில் நடைபெறும் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

மோடியை நேரடியாக எதிர்க்கமுடியாமல், நிதீஷ்குமார் மறைமுகமாக இதுபோன்று செயல்படுகிறார் என பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply