நரேந்திரமோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம் மக்களவைத்தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை யாரிடமும் பேச்சுநடத்தவில்லை, நரேந்திரமோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம் என தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை அவர் மேலும் கூறியதாவது

வரும் மக்களவைத்தேர்தலில் பா.ஜ.க.,வின் 3ஆவது அணி கனவுநனவாகாது என்று சிலர் பேசி வருகின்றனர். 3-ஆவது அணிகுறித்து நாங்கள் கனவுகாணவில்லை. அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் பா.ஜ.க இடம்பெறும் அணிதான் முதல்அணியாக இருக்கும்.

தமிழகத்தில் அதிமுக, மதிமுக, பாமக, திமுக, விடுதலை சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளும் எங்களோடு கூட்டணியிலிருந்த கட்சிகள்தான். நரேந்திரமோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கூட்டணிகுறித்து இதுவரை யாரிடமும் நாங்கள் பேசவில்லை.

பா.ஜ.க தலைவர்கள் படுகொலைவழக்கில் தேடப்பட்டுவந்த பயங்கரவாதிகளை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீஸார் போராடி கைதுசெய்துள்ளனர். தங்களது உயிரைப் பொருள்படுத்தாமல் போராடிய போலீஸாருக்கு பரிசுத்தொகையும் பதவி உயர்வும் வழங்கவேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைத்திருந்தோம்.

அதனை ஏற்று பரிசுத்தொகையும், பதவி உயர்வும் அளித்துள்ள முதல்வருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Leave a Reply