ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராமங்கள் இஸ்லாமிய பயங்கரவாத செயல்களாளினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குட்டி காஷ்மீராக மாறிவருகிறது என்று இந்துமுன்னணி நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, வண்ணான் குண்டு, தேவிப் பட்டினம், சித்தார்கோட்டை, அழகன் குளம், பனைக்குளம், பாம்பன், வேதாளை, பொட்டக வயல், பெரிய பட்டினம், மண்டபம், வேதாளை, கீழக்கரை உள்ளிட்ட 19 கிராமங்களில் இஸ்லாமிய பயங்கரவாதசெயல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாஜக. பிரமுகர் முருகன் கொலைசெய்யப்பட்ட வழக்கில் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கும் பங்கு இருக்கிறது. ஆனால் காவல் துறை நிலத்தகராறு என அவசரம், அவசரமாக அறிக்கைவிட்டிருக்கிறது. இவ்வழக்கில் தொடர்புடைய பரமக்குடியைசேர்ந்த அஸ்லாம் என்பவர் சவூதிக்கு தப்பி ஓடியிருப்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும்.

ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியில் 4 முறையும் முஸ்லிம்களே பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ.வுமாக இருந்த அன்வர் ராஜா பயங்கரவாதிகள் 3 பேரை போலீஸார் கைதுசெய்ததற்கு வரவேற்று ஒரு அறிக்கைகூட விடவில்லை. அதேபோல ராமநாதபுரம் எம்எல்ஏ. எம்.ஹெச். ஜவாஹிருல்லா பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர் என்று கூறுகிறார்கள்.

அப்படி என்றால் அவர்மீது நடவடிக்கை எடுக்க அரசுதயங்குகிறது. ராமநாதபுரத்தில் விநாயகர்சிலைகள் நான்கினை காவல்துறையினரே எடுத்துச்சென்று கரைத்துவிட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்திலும் டிரம்செட் அடிக்கக்கூடாது என்றார்கள். ஆனால் மற்ற மதவிழாக்களில் வாசிக்க அனுமதிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 ஊர்களில் முளைப்பாரி ஊர்வலங்கள் வழக்கம்போல செல்லும் பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் செல்ல காவல்துறை உத்தரவிடுகிறது. தேவிபட்டினத்தில் கஞ்சிகலைய ஊர்வலம் செல்லும்பாதை கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டுள்ளது. அதேபோல அங்குள்ள நவபாஷாணத்தில் யாத்ரீகர்கள் குளிக்க அந்தஊராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலித்துவருவது கண்டிக்கத்தக்கது. ராமநாதபுரம் அருகே பெரிய பட்டினத்தில் மதம் மாற்றுவதற்காகவே ஒருஇயக்கம் செயல்பட்டு வருகிறது, ராமநாதபுரம் ஒரு குட்டி காஷ்மீராக மாறிவருகிறது என்றார் ராம.கோபாலன்.

Leave a Reply