நாட்டின் நலனில் அக்கறைகொண்டு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கவேண்டும் என எடியூரப்பா கோரியுள்ளார்.

கர்நாடக ஜனதாகட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி

அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக ஜனதாகட்சி தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான எடியூரப்பா தலைமை தாங்கினார்.

இதில் எடியூரப்பா பேசியபோது கூறியதாவது:–நாட்டின் நலனில் அக்கறைகொண்டு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவது அவசியம். எனவேதான் கஜக, வருகிற பாராளுமன்றதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட முடிவுசெய்துள்ளது. பா.ஜ.க , கர்நாடக ஜனதா கட்சி தொண்டர்கள் பகைமைபாராமல் பாராளுமன்ற தேர்தலில் அயராதுபாடுபட்டு, இருகட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும். அதேபோல் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்க தேவையான தேர்தல்பணிகளில் ஈடுபட வேண்டும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 10 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. அதேப்போல் அந்த 10 இடங்கள் போக மீதியுள்ள இடங்களில் வெற்றிபெற வேண்டும். இதற்கு கர்நாடக ஜனதாகட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். பாராளுமன்றதேர்தலில் கர்நாடகத்தில் 10 இடங்களில் போட்டியிடுவோம். எனவே, இப்போதே தொண்டர்கள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.என்று அவர் பேசினார்.

Leave a Reply