ஆந்திரமாநிலம் புத்தூரில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை பிடிக்கசென்றபோது காவல்துறை ஆய்வாளர் லட்சுமணனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது.

உடனடியாக சென்னை கொண்டுவரப்பட்ட லட்சுமணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல்துறை ஆய்வாளர் லட்சுமணனை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில்சந்தித்து உடல்நலம் விசாரித்ததோடு ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், "முதலமைச்சர் ஜெயலலிதா, எஸ். லட்சுமணனின் வீரதீரச்செயலை பாராட்டி, தமிழக மக்களின் நன்றியை தெரிவிக்கும் வகையில், 15லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்து அதற்கான காசோலையினை அவரதுமனைவி மதுபென் அவர்களிடம் வழங்கினார்கள்.
அப்போது ஆய்வாளர் லட்சுமணனின் குடும்பத்தினர் முதலமைச்சருக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply