முலாயம்  மகன், மனைவி மீது மீண்டும்  சொத்துக் குவிப்பு வழக்கு  முலாயம் சிங்கின் மகன், மனைவிசொத்துகள் குறித்து வருமான வரித் துறை விசாரணை நடத்தவேண்டும் என சி.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரதுகுடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சமீபத்தில் தான் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்கை முடித்துக்கொண்டது. இதனால் முலாயம்சிங் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கத முலாயம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக. அல்லாத 3வது அணி நிறுத்தும்வேட்பாளரே பிரதமராக வருவார்” என குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து சிபிஐ மீண்டும், முலாயம் சிங்கின் மனைவி சாதனா தனதுமகன் பிரதீக் மைனராக இருந்த போது, அவரது பெயரில் வாங்கியசொத்து குறித்து விசாரணை நடத்தும்படி வருமான வரித்துறையை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் லக்னெüவில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 4 சொத்துகள் பற்றிய விவரங்களையும் சிபிஐ அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு அனுப்பியுள்ளனர்.இதனால் உத்தரப்பிரதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply