தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் போலிஸ் பக்ருதீன் கூட்டாளிகள் தமிழகம் முழுவதும் நாசவேலை நடத்துவதற்காக போலிஸ் பக்ருதீன் கூட்டாளிகள் பரவியிருப்பதாக திடுக்கிடும்தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இந்து அமைப்புகளின் தலைவர்களை தொடர்ச்சியாக கொலைசெய்து கதிகலங்க செய்த முக்கிய தீவிரவாதிகளில் போலிஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களின் மூளையாக செயல்பட்ட அபுபக்கர்சித்திக் தலைமறைவாகி விட்டான். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் போலிஸ் நடத்திய விசாரணையில், மேலும் பலதலைவர்களை கொலைசெய்ய திட்டம் தீட்டியதோடு மட்டுமல்லாமல் முக்கிய இடங்களில் குண்டுகளை வெடிக்கசெய்து தமிழகத்தையே நிலைகுலைய செய்ய திட்டமிட்டிருந்ததும், திருப்பதியில் குண்டுவெடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு தீவிரவாதி இமாம்அலியை தப்பவிட்ட வழக்கில் போலிஸ் பக்ருதீன் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர்.

சிறையில் இருந்த அவர்களுக்கு 2008ம் ஆண்டு நிபந்தனைஜாமீன் வழங்கப்பட்டு அரசு சார்பில் வேலூர்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.

அதன்பிறகு வெளியேவந்த போலிஸ் பக்ருதீன் வேலூரில் சிலருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு மாவட்டத்தின் சில இடங்களில் தீவிரவாத தளங்களை ஏற்படுத்தியுள்ளான்.

மேலும் தீவிரவாதிகளுக்கு தேவையான பணஉதவி மற்றும் ஆலோசனைகளை அபுபக்கர்சித்திக் கொடுத்து வந்துள்ளான். இதன் தொடர்ச்சியாக அபுபக்கர் சித்திக் உத்தரவின்படி போலிஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் வேலூரில் தங்கியிருந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள், இந்து தலைவர்களை தீர்த்துகட்டுவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

அப்போதுதான் வேலூரில் பாஜக வேகமாக வளர்க்கும்பணியில் தீவிரம் காட்டிவந்த மருத்துவ அணி மாநிலசெயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலைசெய்தனர்.

இதுதொடர்பாக போலிஸ்சாரின் அதிரடிவேட்டையில் 3 தீவிரவாதிகள் பிடிபட்டிருந்தாலும், இவர்களது கூட்டாளிகள் 50க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பதாக பக்ருதீனிடம் நடத்தியவிசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது , ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சவாலாக இருக்கும் சித்திக்கை பிடித்தால் தான் கும்பலின் செயல்பாட்டை தடுக்கமுடியும் என்றும் அதுவரையிலும் எப்போது வேண்டுமானாலும் தங்களது கொடூரத்தை அவர்கள் வெளிப்படுத்தலாம் என்றம் கூறியுள்ளார்.

Leave a Reply