மோடியின்  சென்னை வருகையை திருப்பு முனையை உருவாக்கும்  பாஜக. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி சென்னைக்கு வருகையைதொடர்ந்து தமிழக அரசியலில் திருப்புமுனை உருவாகும் என தமிழக பாஜக. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது,

திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டுக்கு குஜராத்முதல்வரும், பாஜக. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வருகையை தொடர்ந்து தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என நான் தெரிவித்திருந்தேன். இந்நிலையில் வரும் அக்டோபர் 18ஆம் நரேந்திரமோடி சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வருகை தர உள்ளார். அப்போது தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும். அப்போது தான் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பாஜக.வின் சக்தியை உணர்வார்கள் என்றார்.

Leave a Reply