ஆயுத பூஜை பெயர் காரணம்?  பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம்சென்று பின்னர் யார்கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞானவாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒருவன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்துவைத்திருந்தனர்.


அஞ்ஞானவாசம் முடிந்தபின் ஆயுத பூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னிமரத்தடியில் வைத்து பூஜைசெய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களைவைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுத பூஜை என பெயர்வந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply