வரும் 18ம் தேதி சென்னைவரும் நரேந்திரமோடி, கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து நாடாளுமன்றதேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி 18ம் தேதி தமிழகம்வருகிறார். தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கியநிர்வாகிகளை சந்தித்து தமிழகத்தில் பாஜக நிலைப்பாடு, கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடக்கும் நானி பல்கிவாலா ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார். அருண்ஷோரி எழுதிய புத்தகத்தை அவர் வெளியிடுகிறார். பத்திரிகையாளர் சோவும் பங்கேற்கிறார்.இது குறித்து மாநில செயலாளர் வானதி சினிவாசன் கூறுகையில், 'திருச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி கட்சி நிர்வாகிகளை சந்தித்துபேசுவதாக இருந்தது. நேரம் இல்லாததால் முடியவில்லை. வருகிற 18ம் தேதி சென்னைவரும் மோடி கட்சி அலுவலகத்தில் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துபேசுகிறார் என்றார்.

Leave a Reply