நரேந்திர மோடியின் அலையால் உ.பி., பீகாரில் காங்கிரஸ், முலாயம்சிங் மற்றும் நிதிஷ்குமாருக்கு பின்னடைவு ஏற்ப்படும் என்று எக்காமிக்ஸ் டைம்ஸ் – ஏசி.நீல்சன் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது..

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உபி., தான் மத்தியில் ஆட்சியமைக்கும் சக்தியாக இருந்துவருகிறது. இங்கு வெற்றிபெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கியபங்கு வகிக்கும்.

இந்நிலையில் தற்போது உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இருமாநிலங்களிலும் நரேந்திரமோடி அலை வீசுவதாக எக்காமிக்ஸ் டைம்ஸ் – ஏ.சி.நீல்சன் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இருமாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 120 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இப்போது தேர்தல்நடந்தால் இந்த இருமாநிலங்களிலும் 44 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009 பாராளுமன்றதேர்தலில் உத்தரபிரதேசம், பீகார் இரண்டிலும் சேர்த்து மொத்தம் 23 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. தற்போது பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியிலும் உ.பி.,யில் அகிலேஷ் யாதவ் ஆட்சியிலும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாலும் பா.ஜ.க வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என கருத்துகணிப்பு தெரிவிக்கிறது.

இதன்மூலம் பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக திகழும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 27 தொகுதிகள்கிடைக்கும். பீகாரில் 17 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணக்கில் தெரியவந்துள்ளது.

இந்த இருமாநிலங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் 2009–ல் 21 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரசுக்கு தற்போது 12 தொகுதிகள் தான் கிடைக்கும்.

பீகாரில் கடந்த தேர்தலில் 4 தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரசுக்கு இந்த முறை 2 தொகுதிகள்தான் கிடைக்கும் என கருத்துகணிப்பு கூறுகிறது.

உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிக்கும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் பெரும்சரிவு ஏற்பட்டுள்ளது. மாயாவதியைவிட முலாயம் சிங் யாதவின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. அந்தகட்சிக்கு தற்போது இருக்கும் 23 எம்பி.க்களின் எண்ணிக்கை 16 ஆககுறையும்.

பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தற்போது இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 20ல் இருந்து 10ஆக குறையும் என கருத்துகணிப்பு தெரிவிக்கிறது.

இந்த இரு மாநிலங்களிலும் நரேந்திரமோடியா? ராகுல்காந்தியா? என்று நேரடியாக கேள்வி கேட்டால் நரேந்திர மோடிக்குத்தான் ஆதரவு என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply