கடந்தவாரம், புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் என்னோடு கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் –ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்..டாக்டர்.ஜஹருல்லா.. இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் தொகையைவிட சிறைச்சாலைகளில்

அவர்களின் சதவீதம் அதிக மாக உள்ளது..என்றார்..வேண்டுமென்றே அரசு பொய்வழக்கு போட்டு முஸ்லீம் இளைஞர்களை சிறையில் அடைப்பதாக குற்றஞ்சாட்டினார்..

நான் அவரிடம் கேட்கும் கேள்வி இதுதான்…மேற்குவங்க மக்கள் தொகையில் முஸ்லீகள் 25 சதவீதம் உள்ளார்கள்..மேற்கு வங்க சிறைச்சாலைகளில் முஸ்லீம்கள் எண்ணிக்கை 46 சதவீதம்..மேற்கு வங்கத்தை இதுவரை 35 ஆண்டுகாலமாக ஆண்டது இவர்களுடன் நெருக்கமாக்–ஒட்டி உறவாடிய இடது சாரி–வலதுசாரி கம்யூனிஸ்ட்கள்..இப்போது சொல்லுங்கள் ஜவஹருல்லா சிறைச்சாலைகளில் முஸ்லீம் எண்ணிகையை பெருக்கியது யார்?

உ.பி.யின் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 20 சதவீதம்..உத்திரப்பிரதேச சிறைச்சலைகளில் முஸ்லீம்கள் 27 சதவீதம்..உ.பி.யை அப்போது காங்கிரசும், இப்போது முஸ்லீம்களின் பெருவாரியான ஆதரவோடு ஆண்டுகொண்டிருப்பது முலயாம் சிங்கின் சமாஜவாடி கட்சியும் தான்…இப்போது சொல்லுங்கள் ஜவஹருல்லா..முஸ்லீம்களின் இந்த நிலக்கு யார் காரணம்?

மராட்டிய மக்கள் தொகையில் 10 சதவீதம் முஸ்லீம்கள்..சிறைச்சாலைகளில் அவர்களின் தொகை 32 சதவீதம்..மராட்டியத்தை அன்றும் இன்றும் யார் ஆளுகிறார்கள்..உங்களின் தயவோடு..ஆதரவோடு காங்கிரசும், சர்த்பவார் கட்சியும் ஆளுகிறார்கள்..ஜவஹருல்லாவிற்கு சிறைச்சலைகளில் முஸ்லீம்கள் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்..

நீங்கள் ஆளும் குஜராத் பற்றி மட்டும் நீகள் ஏன் சொல்ல வில்லை என்று நீங்கள் கேட்டு விடக்கூடாதல்லவா? சொல்கிறேன் கேளுங்கள்..குஜராத் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 9 சதவீதம். குஜராத் சிறைச்சலைகளில் அவர்கள் 18 சதவீதம்.

.இப்போது சொல்லுங்கள் எஸ்.ஆர்.சேகர்..முஸ்லீம்கள் மீது மோடி அரசு பொய் வழக்கு போட்டதால்தானே எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது..என்று நீங்கள் கேட்க நினைப்பது என் காதில் விழுகிறது..

குஜராத்தில் மோடிக்கு இது 4 வது முறை..பாஜகவிற்கு 5 வது முறை..1995 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே இதே சதவீதம் தான் அங்கு தொடர்கிறது என்ற உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்..

பாகிஸ்தான் எல்லை பகுதியில் குஜராத் இருப்பதால், கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை காலம் காலமாக முஸ்லீம்கள் செய்து வருவது சரித்திர பூர்வமான உண்மை…அதனால் வந்த உயர்வு இது..

இப்போது மோடி காரணம் என்று நீங்கள் கூறினால், மோடிக்கு முன் யார் காரணம்?

ஜவஹருல்லா பதில் சொல்வாரா? .

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply