விஷப் பத்திரிகை செய்திடும் முயற்சி கடுகளவு கூட வெற்றி பெறாது மீண்டும் நம் சமுதாயத்தின் மீது விஷத்தை உமிழ்ந்துள்ளது. "மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி" என்ற தலைப்பில் நம் இயக்கமான R.S.S னை வன்மத்துடன் சாடியுள்ளது மட்டுமல்லாமல் பொதுச் சொத்துகளுக்குத் தீயிடுதல், சேதப்படுத்துதல் மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு என கொள்ளை

கும்பலினை சித்தரிப்பது போல் இயக்கத்தினை குறித்து அவதூறான செய்தினை வெளியிட்டு மக்களின் மத்தியில் ஒரு தவறான தோற்றத்தினை ஏற்படுத்த இந்த விஷப் பத்திரிகை செய்திடும் முயற்சி கடுகளவு கூட வெற்றி பெறாது.

ஆரம்பித்த நாள் தொடங்கி ஆயிரக்கணக்கான பிரச்சினைகளையும் சவால்களையும் ஒருங்கே சந்தித்து மக்களின் ஆதரவால் தகர்த்தெறிந்த ஒர் இயக்கம் உலகினில் உண்டென்றால்  அது நமது ஸ்வயம் சேவக இயக்கம் தான்.பிரதிபலன் பாராது நாட்டின் அனைத்து இயற்கை பேரழிவு யுத்தம் தொடங்கி அனைத்திலும் ராணுவ வீரர்களுக்கு நிகராக தோள் கொடுத்து சோதனைக் காலங்களிலும் பணியாற்றும் நம் ஸ்வயம் சேவகர்களை குறித்து பேச சீன ஏஜென்ட் கம்யூனிஸ்ட் கைக்கூலியான இந்த பத்திரிகைக்கும் அதன் அதிபர் ராமிற்கும் தகுதி இல்லை .

நடுநிலை என்ற பெயரில் பெரும்பான்மையினர் மீது திட்டமிட்ட தன்னிலை பிறழ்ந்த வக்கிரமான வசையாடலை இனி மேலும் நிறுத்தாவிடல் நம் ஒற்றுமையினையும் உணர்வினையும் இவர்களுக்கு புரிய வைப்போம்.இவர்களின் ஊடக விபச்சாரத்திற்கு முடிவு கட்டிடுவோம்.

உங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். தேச விரோத சக்திகளுக்கு எல்லா
இடங்களிலும் பதிலடி குடுத்தே ஆவோம்.

http://tamil.thehindu.com/opinion/columns/மறக்கப்பட்ட-1949-வாக்குறுதி/article5236200.ece

அதே போல் இன்று முதல் நான் எங்கள் அலுவலகத்திலும், வீட்டிலும் வாங்கிக்
கொண்டு இருந்த தி ஹிந்து – ஆங்கிலம் மட்டும் தமிழ் நாளிதழ் நிறுத்தப்
படும். எனக்கு தெரிந்த ஒரு ஐம்பது பேரையாவது நான் நிறுத்த வைப்பேன்.
உங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யுங்கள் தேச விரோத சக்திகளுக்கு நாம்
எல்லா இடங்களிலும் பதிலடி குடுத்தே ஆவோம்.

அன்புடன்,,,
ஸ்.சரவணன்,
திண்டுக்கல்.

Leave a Reply