ஏற்காடு இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா போட்டியிடாது டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏற்காடு இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா போட்டியிடாது என பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கக்கோரி திமுக தலைவர் கருணாநிதி, பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக பாஜக உயர்மட்டக் குழுவின் கூட்டம் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு அவர்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவுகேட்டு திமுக தலைவர் கருணாநிதி எழுதியகடிதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தபிறகு, யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து முடிவுசெய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply