“கர் கர் பிஜேபி” எனும் குறிக்கோளை முன்வைத்து தில்லி பிரிவு பாஜக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் அரசின் தோல்விகளை எடுத்துரைக்கும் வகையில் இது மேற்கொள்ளப்படுவதாக பாஜக கூறியுள்ளது.

தில்லி பிரிவின் தலைவர் விஜய்கோயல், வடதில்லியில் மக்கள் நெருக்கம் மிகுந்துள்ள பகுதிகளில், 280 மண்டலங்களில் ஐந்துநாள் பிரசார முகாமைத் துவக்கிவைத்தார்.

இந்தமுறை, நகரில் கேள்விக்குறியான பெண்கள்பாதுகாப்பு, கல்வி, சாலை, ஆரோக்கியம், உணவு, மின்தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக் குறை, உள்ளிட்ட பிரச்னைகள் தில்லி அரசின் கழுத்தை நெரித்துள்ளது.

இவற்றையெல்லாம் முன்வைத்து இந்தமுறை பிரசாரம் மேற்கொள்ள போவதாக விஜய்கோயல் தெரிவித்துள்ளார். இவற்றை முன்வைத்தே தேர்தல் அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை அளித்து, மக்களிடம் இருந்து கருத்துகேட்பு நிகழ்ச்சியையும் பாஜக நடத்துகிறது.

Leave a Reply