தந்திரங்களையும் , அநியாயங்களையும் ஒழித்து நரேந்திர மோடி நாட்டை காப்பார்  எத்தனையோ வரம்பெற்றிருந்த இரணியனின் அழிவு நரசிம்ம அவதாரத்தால் நடந்ததை போன்று எத்தகைய தந்திரங்களையும் , அநியாயங்களையும் ஒழித்து நரேந்திர மோடி நாட்டை காப்பார் என்று பா.ஜ.க தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று சென்னைவருகிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை சென்னை பல்கலைகழக மண்டபத்தில் நடத்த அனுமதிக்ககூடாது என்று கோர்ட்டில் வழக்குதொடர்ந்துள்ளனர். அவரது வருகைக்கு எதிர்ப்புதெரிவித்து சில மாணவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். இதுபற்றி தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

பாரதத்தைகாப்பாற்ற நரேந்திர மோடியின் தலைமை அவசியம் என்பதை எல்லோரும் உணர்ந்து ஆதரவளித்துவருகிறார்கள். அவரது வருகையை ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும், இளையசமுதாயமும் வரவேற்கிறது.

ஒருசில மாணவர்களின் தனிப்பட்டவிருப்பு, வெறுப்புகளுக்காக சிலரது தூண்டுதலின் பேரில் எதிர்ப்புதெரிவிப்பது எந்த வகையிலும்பாதிக்காது. சில அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்றால் அதன்பின்னணியில் இருந்து செயல்படும் சக்திகள் எது என்பதை உளவுத் துறை ஆய்வு செய்யவேண்டும்.

சரியான முறையில் ஆய்வுசெய்தால் நாட்டுக்கு எதிரானசக்திகள் திரை மறைவில் செயல்படுவது தெரியவரும்.

நல்லது செய்ய புறப்படும் போது சில நாசகாரசக்திகளும் உருவாகத்தான் செய்யும். இது புராணகாலம் தொட்டே இருக்கத்தான் செய்கிறது. கம்சன், நரகாசுரன், மகிஷாசுரன், சூரபத்மன் போன்ற அழிவுசக்திகளை கடவுளே அவதாரம் எடுத்து அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்தகாலத்தில் சட்டம் கடவுளின்வடிவில் அதன் கடமையைசெய்து நாசகார சக்திகளை அழிக்கும்.

எத்தனையோ வரம்பெற்றிருந்த இரணியனின் அழிவு நரசிம்ம அவதாரத்தால் நடந்தது. அதேபோன்று அரசியல் ரீதியாக எத்தனை தந்திரங்களை யார் எப்படிகையாண்டாலும் அவற்றையெல்லாம் முறியடித்து நரசிம்ம அவதாரம்போல் அநியாயங்களை ஒழித்து நாட்டைகாக்கும் வகையில் நரேந்திர மோடி உலகளவில் மாபெரும்சக்தியாக திகழ்வார் என்றார்.

Leave a Reply