வரும் நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்றவேண்டும் என்று குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் மூத்த பத்திரிகையாளர் அருண் ஷோரியின் நூல்வெளியீட்டு விழாவில் வணக்கம் என்று தமிழில்கூறிவிட்டு நரேந்திர மோடி பேசியதாவது: ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலைபெற மட்டுமே சுதந்திரப்போராட்டம் அல்ல.. சர்வதேச அளவிலான காலனி ஆதிக்கத்துக்கு எதிரான இயக்கத்தின் ஒரு பகுதியாகவுமே சுதந்திரப்போராட்டம் இருந்தது.

அதனடிப்படையிலேயே வெளியுறவு கொள்கை உருவெடுத்தது. அடுத்த நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்றவேண்டும்: ஆசிய, கிழக்காசிய நாடுகளுக்கும் நமக்கும் இடையே புத்தர்தான் பொதுஇணைப்பாக இருக்கிறார். இந்தஇணைப்பை நாம் பலப்படுத்த வேண்டும். 60 ஆண்டு காலமாக அண்டை நாடுகளின் நல்லுறவை நாம் பெறத்தவறிவிட்டோம். நாம் பலவீனமாக இருக்கிறோம் உலகநாடுகளில் பொதுவாக பாதுகாப்பற்ற நிலைமையே காணப்படுகிறது.

இந்தியாவை சீனா எப்படியெல்லாம் நடத்துகிறது என்பதை அருண் ஷோரி இந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார். நாம்பலவீனமாக இருக்கிறோம். நாம் நம்மை பலப்படுத்திக் கொள்ளவேண்டும். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சக்தியையும் சாந்தியையும் வெளிப்படுத்தினோம். அணு ஆயுதசோதனை நடத்தியபோது தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் வாஜ்பாயின் அரசியல் திறத்தால் மீண்டும் அணு ஆயுதசோதனை நடத்தினோம்.

அடுத்த நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்றவேண்டும்: பொருளாதாரத் தடைகளே மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தும் சக்தியை கொடுத்தது. நாட்டின் பாதுகாப்பின் மீதான அக்கறையினாலே மீண்டும் அணு ஆயுதசோதனை நடத்தப்பட்டது. ஏன் அவரை அனுப்பினீங்க? நாட்டின் ரூபாய் மதிப்பு அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது. அந்த நபரை (நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை) தமிழர்கள் ஏன்டெல்லிக்கு அனுப்பினீர்கள் என தெரியவில்லை.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. நமது ராணுவத்தை வலிமைப்படுத்த, நவீனப்படுத்த டெல்லியில் உள்ள மத்தியஅரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது. வெளியுறவுக் கொள்கையை வலுவானதாக, பாதுகாப்பானதாக மாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியாவை போல பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு எதுவும்இருக்காது. வாஜ்பாய் தான்… காஷ்மீர் விவகாரத்தை முதன் முதலில் தீவிரவாதிகள் பிரச்சனையாக உலகரங்கில் எடுத்துவைத்தார் வாஜ்பாய். பயங்கரவாதத்துக்கு எதிராக உலகநாடுகளுடன் நாம் இணைந்து செயல்படவேண்டும். வியாபாரமும் வர்த்தகமும் மிகவும் முக்கியமானது.. இவைகளே நமது வெளியுறவு கொள்கைக்கான வழிகாட்டிகள்.

நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொந்த கட்சியிலேயே ஆதரவு இல்லை. அடுத்த நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்றவேண்டும்: பயங்கரவாதம் என்பது பிளவுபடுத்த கூடியது.. சுற்றுலா என்பது தான் ஒன்றிணைக்க கூடியது. நமது நாட்டின் ராணுவ வீரர்களின் தலைகள் வெட்டிஎடுக்கப்படும் போது வெறும்பத்திரிகை செய்திகளோடு போதும் என்று நின்றுவிடுகிறோம். நம்மீதான தாக்குதல்களின் போது அறிக்கைகளோடு நின்று விடுகிறோம். மக்கள் எப்போதும் பதற்றத்துடன் இருந்தால் இந்நாடு எப்படி இயங்கும்?.

வெளியுறவுத்துறை அமைச்சரோ வெறும் அறிக்கைகளைத் தான் வாசிக்கிறார். சீனாவுக்குப்போகும் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங்கில் தங்கவே விரும்புகிறேன் என்கிறார். இதுவா வெளியுறவுக்கொள்கை? இது மாறவேண்டும். அடுத்த நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்றவேண்டும்:

நமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகள் அவசியம். உலக நாடுகளின் விவகாரங்களின் இந்தியா முக்கியபங்காற்ற வேண்டும். தற்போதைய நூற்றாண்டை ஆசியாவினுடையதாக மாற்றவேண்டும் அடுத்த நூற்றாண்டு ஆசியாவினுடையது என்பதை உலகம் ஒப்பு கொண்டுவிட்டது. நாம் அடுத்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றவேண்டும் என்றார்.

Leave a Reply