தற்போதைய சூழலில் நரேந்திர மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார் , தற்போதைய தேர்தல் நரேந்திரமோடியை மையமாக வைத்து நடைபெறுகிறது என மூத்த பத்திரிகையாளர் சோராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னையில் அருண்ஷோரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் சோ ராமசாமி, மோடியை நமக்காக கடவுள் அனுப்பிவைத்திருக்கிறார். தற்போதைய தேர்தல் நரேந்திரமோடியை மையமாக வைத்து நடைபெறுகிறது-

எங்களது 2 நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொண்டிருக்கிறார்.. எங்களிடத்தில் மிகுந்த அன்பை மோடி வைத்திருக்கிறார். அவரைப்பற்றி நாங்கள் துக்ளக்கில் எழுதினால் அவர் உடனே எங்களுக்குப் போன்செய்து நன்றிதெரிவிப்பார் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் அருண்ஷோரி, இது நரேந்திர மோடியில் இளைஞர் கல்விமுகாம். என்னுடைய புத்தகத்தை நரேந்திரமோடி வெளியிடுவதன் மூலம் என்னுடைய புத்தகம் அதிக விற்பனையாகும் என்பதை நான் அறிவேன்.

நரேந்திரமோடிதான் நமக்கு புதியநம்பிக்கை.. புதியபாதை.. நம்முன் உள்ள உடனடி பிரச்சனை பாகிஸ்தான் தான். ஆனால் அதை எதிர்கொள்ளலாம். சீனாதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்று கூறியதுடன் சீனா எப்படியெல்லாம் நமக்கு எதிராக இருக்கிறது என்றும் விவரித்தார்.

Leave a Reply