”மோடி பிரதமரானால், குஜராத்தை போன்றே நாட்டை கடனில் மூழ்கடித்துவிடுவார்” என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்கின் பொய்யான கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .

இது குறித்து பாஜ தலைவர்களில் ஒருவரான சித்தார்த் நாத்சிங் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ”குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றபோது, அம்மாநில தனிநபர்கடன் 39 சதவீதமாக இருந்தது. திட்டக்கமிஷன் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. இப்போது இது 9 சதவீதமாக குறைந்துள்ளது. தேசிய அளவில் தனிநபர்மீதான சராசரி கடன் ரூ 33 ஆயிரமாக உள்ளது. ஆனால், குஜராத்தில் இது ரூ 23 ஆயிரமாக உள்ளது. திக்விஜய் சிங்குக்கு பொருளாதாரம்பற்றி எதுவும் தெரியாது. அரசியலில் அவர் திவாலாகிவிட்டார்” என்றார்.

Leave a Reply